நடிகர் விஜய் கார் பின்னால் வந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட விபத்து.. கண்டுக்காமல் போன விஜய்
விஜய் ரசிகர்கள் சந்திப்பு
தளபதி விஜய் நேற்று தனது ரசிகர்களை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்க பெரிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் வந்திருத்தனர். விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து பனையூருக்கு காரில் செல்லும் வழியில் ரசிகர்கள் சிலர் விஜய்யை பின் தொடர்ந்தனர்.
கார் பின்னால் வந்த ரசிகர்கள்
காரில் சென்று கொண்டிருக்கும் விஜய்யை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் காரின் வேகத்திற்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளனர்.
அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதால் ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் படுகாயமும் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தை பார்த்தபின்பும் ரசிகர்களை கண்டுக்காமல் விஜய் போனதனால் ரசிகர்கள் விஜய் மீது கடும் கோபமடைந்துள்ளனர்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
