நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி! கண்ணை மூடுவதற்குள் இதை செய்ய வேண்டும்
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் மிகப்பெரியது.
கடிதம் எழுதிய மூதாட்டி
நாமக்கல்லை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு தனது வறுமை பற்றி விவரித்து கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் விஜய் முகவரி தெரியாததால் அதை அனுப்ப முடியவில்லை. அது 3 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தெரியவந்திருக்கிறது.
அதை பார்த்துவிட்டு தற்போது விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அந்த மூதாட்டி வீடு தேடி சென்று மளிகை பொருட்கள், பணம் என அனைத்தையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

கண்ணை மூடுவதற்குள் விஜய்யை பார்க்க வேண்டும்
தற்போது ஒரு டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கும் அந்த மூதாட்டி விஜய் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
மேலும் அவர் கண்ணை மூடுவதற்குள் விஜய்யை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என ஆசை இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
மூதாட்டியின் இந்த ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா?
Great work by Vijay Makkal Iyakkam ❤??! @Actorvijay @BussyAnand @Jagadishbliss #BEAST pic.twitter.com/8oMAdn7LTZ
— TVMP TEAM (@ActorVijaySquad) March 23, 2022
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri