வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன்.. எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு
விஜய்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய ஒருவர் தான் தங்கர் பச்சான்.
இவருடைய மகன் விஜித் கதாநாயகனாக 'பேரன்பும் பெருங்கோபமும்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இதில், சிறப்பு விருந்தினராக விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் கலந்து கொண்டு பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பரபரப்பு பேச்சு
அதில், "தனது மகனை தானே சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நானும் எனது மகனை அப்படி தான் அறிமுகப்படுத்த விரும்பினேன்.
விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் போய் நின்றேன். ஒருவரும் முன்வரவில்லை. அதனால் வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன்" என்று கூறியுள்ளார்.

டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி IBC Tamilnadu
