கோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் பிறந்தநாள்- வெளிவந்த வீடியோ
விஜய்யின் தந்தை
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கும் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தை தொடங்கி வைத்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் தான் தனது மகனை முதலில் இயக்கி சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
தனது அப்பாவின் இயக்கத்தில் சில படங்கள் நடித்த பிறகே விஜய் மற்ற இயக்குனர்களுடன் இணைய தொடங்கினார்.
இப்போது விஜய்யின் 67வது படமான லியோ படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
தற்போது விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி ராடான் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சீரியலின் படப்பிடிப்பு நடந்து வர இடையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பிரேக்கப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடிய சீரியல் நடிகை! வீடியோ இதோ..