பீஸ்ட் ரிலீஸுக்கு ஒரே நாள்.. இப்போது விஜய் அப்பா எஸ்ஏசி வெளியிட்ட வீடியோவை பாருங்க
விஜய்யின் பீஸ்ட் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. ரசிகர்கள் விஜய்யை திரையில் பார்க்க தயாராகி வருகின்றனர்.
அப்பா பற்றி பேசிய விஜய்
பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் சன் டிவியில் பேட்டி அளித்திருந்தார். அப்போது அப்பா பற்றி பேசி இருந்தார். 'கடவுளை நேரில் பார்க்க முடியாது. ஆனால் அப்பாவை நேரில் பார்க்கலாம்' என கூறி இருந்தார்.
ஏற்கனவே விஜய் மற்றும் அவரது அப்பா எஸ்ஏசி இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில் விஜய் இப்படி சொன்னது வைரல் ஆனது.

எஸ்ஏசி வெளியிட்ட வீடியோ
இந்நிலையில் எஸ்ஏசி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. "பாசமிகு பிள்ளைகளே வணக்கம். பீஸ்ட் நாளை கழித்து ரிலீஸ், உங்களை போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன், ரசிகனாக. உங்கள் வெற்றி கொண்டாட்டத்திற்கு என் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
Beast From April13th? @actorvijay @sunpictures @Nelsondilpkumar#BeastModeON #BeastMovie #Beast #BeastFromApril13th #பீஸ்ட் pic.twitter.com/642O7dp6nf
— S A Chandrasekhar (@Dir_SAC) April 11, 2022