எஸ்ஏசி - ஷோபா தனியாக கட்டிய புது வீடு கிரஹப்பிரவேசம்.. நடிகர் விஜய் வராதது ஏன்?
நடிகர் விஜய் மற்றும் அவரது அப்பா எஸ்ஏசி ஆகியோர் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
எஸ்ஏசி மற்றும் ஷோபா இருவரும் தனியாக தான் வசித்து வருகின்றனர். அவ்வப்போது விஜய் நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் சமீப காலமாக கலந்துகொள்கின்றனர்.
வராத விஜய்?
இந்நிலையில் எஸ்ஏசி மற்றும் ஷோபா ஆகியோரின் புது வீடு கிரஹப்பிரவேசம் நடைபெற்று இருக்கிறது. அதில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
ஆனால் விஜய் இந்த நிகழ்சிக்கு வராதது ஏன் என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் மனைவி மற்றும் குழந்தைகள் என யாருமே வராதது எஸ்ஏசிக்கு வருத்தமாக தான் இருந்திருக்கும் எனவும் நெட்டிசனைகள் கூறி வருகின்றனர்.




