எனக்கு விஜய் கடன் கொடுத்தாரா.. அப்பா எஸ்ஏசி கொடுத்த விளக்கம்

By Parthiban A Apr 21, 2026 05:24 PM GMT
Report

தேர்தலில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை குறிப்பிட்டு இருந்தார். அதில் தனது அப்பா, அம்மா, மகன், மகள், மனைவி என குடும்பத்தினருக்கே கடன் கொடுத்தது போல கணக்கு காட்டி இருந்தார்.

அதை வைத்து விஜய்யை விமர்சனமும் செய்தனர். இணையத்தில் பெரிய பேசுபொருளாகவும் அது மாறியது.

எனக்கு விஜய் கடன் கொடுத்தாரா.. அப்பா எஸ்ஏசி கொடுத்த விளக்கம் | Vijay Father Sac Reply On Money Debt To Family

எஸ்ஏசி விளக்கம்

இந்த சர்ச்சை பற்றி விஜய்யின் அப்பா எஸ்ஏசி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "அப்பாவுக்கு இவ்வளவு கொடுத்து இருக்கிறேன் என அக்கவுண்ட் புக்கில் எழுதியதை தேர்தல் பிரமான பாத்திரத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார்."

"உடனே அதை கடன் கொடுத்ததாக தவறாக சொல்கிறார்கள். 200 கோடி சம்பாதிக்கும் பிள்ளை அப்புவுக்கு ஒரு 5 கோடி கொடுக்க கூடாதா?."

"கொடுத்தேன் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடனாக கொடுத்தேன் என குறிப்பிடவில்லை" என எஸ்ஏசி கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US