விஜய் சிறு வயது முதல் இதை பார்த்து தான் வளர்ந்தார்..ரகசியத்தை உடைத்த எஸ்ஏசி
Bhavya
in பிரபலங்கள்Report this article
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். உழைப்பாலும், நடிப்பு மேல் உள்ள அதீத ஆசையாலும் சினிமாவில் நுழைந்து தற்போது பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர்.
தற்போது, விஜய் அவரது கடைசி படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில், சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
சந்திரசேகர் பேட்டி
இந்நிலையில், விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்ஏசி விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் விஜய் குறித்தும் அவரது மனைவி குறித்தும் பேசியுள்ளார்.
அதில், " இசை கல்லூரியில் படித்த போதே நான் என் மனைவியை திருமணம் செய்து கொண்டேன். அப்போது விஜய் கருவில் இருந்தபோது ஷோபா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தினந்தோறும் பாடுவார்.
அந்த நேரத்தில் நான் உதவி இயக்குனராக இருந்ததால் பெரும் அளவில் சம்பளம் இல்லை என் மனைவி சம்பளத்தில் தான் அப்போது சாப்பிட்டோம்.
விஜய் சிறு வயது முதல் இசை கேட்டு வளர்ந்ததால் அப்போதே பாடுவதற்கு தயாராகி விட்டார்.
அதனால், தான் தற்போது இவர் பாடும் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார்.