விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் விஜய். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார்.

இனி சினிமா இல்லை முழுநேரம் அரசியல்தான் என்கிற இவருடைய முடிவு சற்று வருத்தத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தாலும், அரசியல் தலைவராக விஜய்யை கொண்டாடி வருகிறார்கள்.
தீபாவளி
நடிகர் விஜய்யின் திரைப்படம் எப்போது திரையரங்கில் வெளிவந்தாலும், தீபாவளி பண்டிகை வந்ததுபோல் கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், அதே படம் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்தால், சொல்லவா வேண்டும்.

அப்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் அள்ளிய விஜய்யின் திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறறோம்.
இதோ அந்த லிஸ்ட்:
லியோ - ரூ. 590 - 600 கோடி
பிகில் - ரூ. 290 - 300 கோடி
சர்கார் - ரூ. 250+ கோடி
மெர்சல் - ரூ. 250+ கோடி
கத்தி - ரூ. 120+ கோடி
துப்பாக்கி - ரூ. 115+ கோடி
வேலாயுதம் - ரூ. 65 கோடி
திருமலை - ரூ. 39 கோடி
பகவதி - ரூ. 10+ கோடி