நடிகர் விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லாத நிலையில், பீஸ்ட் படம் விஜய் திரைவாழ்க்கையில் தோல்வி படமாக அமைந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் முதல் சம்பளம்
நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் வெற்றி. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 500 சம்பளமாக கொடுப்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யின் தந்தையும், பிரபல மூத்த இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பிரஸ் மீட் ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.