நடிகர் விஜய்க்கு முழு உருவச்சிலையை வைத்த ரசிகர்கள்- அட்டகாசமான சிலை இதோ
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு பெரிய நடிகர் விஜய். இவரது படங்கள் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும்.
அவரது நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது. கொரோனா நோய் தொற்று கொஞ்சம் குறைந்து இருக்க படம் திரையரங்கில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது.
அதன்பிறகு விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஃபஸ்ட் லுக் எல்லாம் அண்மையில் வெளியாக ரசிகர்கள் கொண்டாடினர்.
தற்போது கர்நாடகாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவருக்கு முழு உருவச்சிலையை உருவாக்கியுள்ளனர். அந்த உருவச்சிலை சென்னையில் உள்ள பனையூரில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த முழு உருவச்சிலை புகைப்படம் வெளியாக ரசிகர்கள் டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
