சிம்பு, வடிவேலு தெரியும், விஜய்யும் ஒருமுறை Red Card வாங்கியுள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். தளபதியை பற்றி பேசாத புதிய படங்களும் இருக்காது, அவரை புகழாத கலைஞரும் கிடையாது.
RRR படத்தின் புரொமோஷனுக்காக வந்த தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் கூட விஜய்யை மிகவும் புகழ்ந்து பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சி கூட ரசிகர்களிடம் படு வைரலானது.
இப்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வரும் விஜய் சினிமாவின் ஆரம்பத்தில் கே.பாலசந்தரிடம் இருந்து பெப்சி மூலம் Red Card எல்லாம் பெற்றுள்ளாராம்.
தமிழில் சில ஹிட் படங்களை கொடுத்து மக்கள் கவனிக்கும் ஒரு இயக்குனராக வலம் வந்தவர் வி சேகர். இவர் அண்மையில் சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியளித்தார்.
அப்போது பேசும்போது அவர், கே.பாலசந்தர் அவர்கள் பெப்சி தலைவராக இருந்தபோது நான் துணை தலைவராக இருந்தேன். அந்த சமயத்தில் சில கருத்து வேறுபாட்டால் என்னுடைய படப்பிடிப்பை 8 நாள் நிறுத்தி வைத்தார்.
பின் அந்த சமயத்தில் சந்திரசேகர் சாருக்கும் பாலசந்தர் அவர்களுக்கும் ஏதோ சின்ன பிரச்சனை இருந்தது. அப்போது கால்ஷீட் பிரச்சனை என நடிகர் விஜய்க்கு ரெட் என்று போட்டுக் கொடுத்துவிட்டார் பாலசந்தர்.
இதுகுறித்து நான் பாலசந்தர் அவர்களிடம் கேட்க நான் போடவில்லை, துணை தலைவர்கள் செய்தார்கள் என கூற நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தான் என் படத்தின் படப்பிடிப்பை 8 நாட்களுக்கு மேல் நிறுத்தினார் என கூறியுள்ளார்.