கில்லி திரைப்படத்தின் முக்கிய காட்சியில் விஜய் மற்றும் த்ரிஷா, பலரும் பார்த்திராத ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கில்லி, மெகா ஹிட்டான இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
