ரஜினியின் தோல்விக்கு பார்ட்டி வைத்து கொண்டாடிய விஜய்.. உண்மை இதுதான்
ரஜினியின் தோல்வி
ரஜினி நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது.
ரஜினியின் திரை வாழ்க்கையில் கண்டிராத ஒரு தோல்வியாக பாபா அமைந்தது என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.
ரஜினியின் இந்த மாபெரும் தோல்வியை, நடிகர் விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதாக சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.
உண்மை இதுதான்
இந்நிலையில், இது உண்மையா? இல்லை வெறும் வதந்தி தானா என்பது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ரஜினியின் தோல்விக்கு விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியது முற்றிலுமாக பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.
மேலும், விஜய் ஒரு ரஜினி ரசிகர் என்பதையும், இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இதன்முலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.