பல வருடங்கள் கழித்து தனது படத்திற்காக விஜய் செய்துள்ள விஷயம்.. என்னவென்று தெரியுமா
வாரிசு
விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற இருக்கிறது.

பின்னணி பணிகள் அனைத்தும் முடிந்து இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துவிட்டனர். அதே போல் வருகிற தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் செய்துள்ள விஷயம்
இந்நிலையில், பல வருடங்கள் கழித்து வாரிசு படத்தின் வெளிநாட்டு ப்ரோமோஷனுக்காக நடிகர் விஜய் தன்னுடைய கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளாராம்.

இதனால், துபாயில் பிரமாண்டமாக வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri