விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அரசியல் வேலைகளை துவங்கிய விஜய்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் விஜய்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
தளபதி விஜய்யின் அரசியல் பிரவசத்திற்கான ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது நெல்லை சென்றுள்ளார் விஜய்.
அங்கு வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2000 மதிப்பிலான நிவாரண பொருட்களை விஜய் வழங்கவுள்ளார்.
1000 நபர்களுக்கு
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 1000 நபர்களுக்கு இந்த நலத்திட்ட உதவியை விஜய் செய்யவிருக்கிறார்.
இது விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் அடுத்தக்கட்டமாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.
கடந்த 28ஆம் தேதி இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய விஜய் தனது அரசியல் என்ட்ரிக்கான வேலைகளை முழு வீச்சில் செய்ய துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.