விஜய் படத்தை வைத்து சன் டிவி, ஜீ தமிழுக்கு இடையே கடும் மோதல்.. வெற்றி யார் பக்கம்?
TRP
தளபதி விஜய்யின் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனாலே TRP உச்சத்தில் இருக்கும். அதுவும் அவருடைய லேட்டஸ்ட் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
கோட் - லியோ
ஆம் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த கோட் படம் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என அறிவிப்பு வெளிவந்தது. அதன்படி, வருகிற 10ஆம் தேதி கோட் படம் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது.
அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில், 2023ல் வசூல் வேட்டையாடிய லியோ படத்தை ஒளிபரப்பவுள்ளனர். இது இரண்டாவது முறையாக லியோ படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜீ தமிழில் கோட் மற்றும் சன் டிவியில் லியோ என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக இருக்க, இதில் எந்த படத்திற்கு அதிக TRP கிடைக்க போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
