GOAT ஆடியோ லான்ச் விழா நடக்குமா நடக்காதா? விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிய தகவல்

Parthiban.A
in திரைப்படம்Report this article
விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க இருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் GOAT படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அதை முடித்தபிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு முழு நேரமாக தீவிர அரசியலில் ஈடுபட போகிறார்.
தற்போது GOAT படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மூன்றாவது சிங்கிள் நாளை காலை வெளிவர இருக்கிறது.
இசை வெளியீட்டு விழா எப்போது?
GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் வழக்கமாக சொல்லும் குட்டி கதை கேட்கவும், அவர் அரசியல் விஷயங்கள் பற்றி பேசப்போகிறாரா என்றும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஆனால் GOAT படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காது என ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பட விழா நடக்கவில்லை என்றாலும் விஜய் அவரது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்த ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்த போகிறார் என கூறப்படுகிறது.
அது எங்கே நடக்க போகிறது என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.