ஒரு வருடத்தை எட்டிய விஜய்யின் கோட் திரைப்படம்... மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய்யின் கோட்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest Of All Time).
இதில் விஜய்யுடன், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம், இப்பட வேலைகளின் போது தான் விஜய்யின் அரசியல் பயண தகவல்கள் முதன்முதலாக வந்தன.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் 2024ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது.
கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் எங்கள் தளபதியை திரையில் கண்டாலே சந்தோஷம் தான் என ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
ரூ. 400 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.