மாஸாக தயாராகும் விஜய்யின் கோட் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு?... தயாரிப்பாளரே சொன்ன தகவல்
விஜய்யின் கோட்
விஜய் தனது கடைசி படத்திற்கு முந்தைய படமாக கோட் படத்தில் நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துவரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. கூடவே படத்திற்கு இசை யுவன் தான் படம் எந்த அளவிற்கு இருக்கும் என ரசிகர்களுக்கே தெரியும்.
சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தில் இடம்பெற்ற 2வது பாடல் வெளியாகி பட்டய கிளப்பியது.
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும், புரொமோஷன் வேலைகளும் நடந்து வருகிறது, படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
பட பட்ஜெட்
இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாகி வருகிறது என்பது நமக்கே தெரியும். சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் கல்பாத்தி ஒரு பேட்டியில் விஜய்யின் கோட் பட பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கோட் படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என்றும் தங்களது தயாரிப்புகளில் இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu
