கோட் திரைப்படத்தின் ரீலிஸ் எப்போது தெரியுமா? வெறித்தனமாக வெளியான போஸ்டர்

By Dhiviyarajan Apr 11, 2024 07:51 AM GMT
Report

கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யா நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வரிசையாக கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் பட ரிலீஸ் தேதி ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால் கோட் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த ஒரு தகவல் இல்லாததால் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

கோட் திரைப்படத்தின் ரீலிஸ் எப்போது தெரியுமா? வெறித்தனமாக வெளியான போஸ்டர் | Vijay Goat Movie Release Date

இந்நிலையில் ரசிகர்களை சந்தோசப்படுத்தும் விதமாக கோட் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US