தமிழ்நாட்டில் 17 நாட்களில் வசூல் சாதனை படைத்த GOAT.. மாஸ் காட்டும் தளபதி விஜய்
விஜய்யின் GOAT
தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக வெளிவந்த திரைப்படம் தான் GOAT.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸ் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். மேலும் 80ஸ் சினிமாவில் கலக்கிய மோகன் வில்லனாக நடித்திருந்தார்.
விஜய்யின் படம் என்றாலே வசூல் வேட்டை நடக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் சொல்லவே தேவையில்லை.
தமிழக வசூல்
இந்த நிலையில், GOAT படம் தமிழ்நாட்டில் தற்போது மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. ஆன், 17 நாட்களில் தமிழக பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே GOAT படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
லியோ படத்தை தொடர்ந்து GOAT திரைப்படமும் தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.