OTTயில் முக்கிய நாளில் வெளியாகப்போகும் நடிகர் விஜய்யின் கோட்... எப்போது தெரியுமா?
விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த சில மாதங்களாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ரிலீஸிற்கு முன், ரிலீஸ் பின் என கோட் படம் குறித்து ரசிகர்கள் அதிகம் பேசியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி இப்போது ரூ. 400 கோடி மேல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வரும் வாரத்திலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Ott ரிலீஸ்
ஒரு படத்தை திரையரங்கில் மக்கள் கொண்டாடிவிட்டார்கள் என்றால் உடனே அவர்கள் ஓடிடியில் எப்போது ரிலீஸ் என தான் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி தற்போது விஜய்யின் கோட் பட ரிலீஸ் பற்றிய தகவல் தான் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அன்று அதாவது அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் கோட் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
