விஜய்யின் 68வது படம் குறித்து புகைப்படத்துடன் சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா- இதோ பாருங்கள்
விஜய் 68
நடிகர் விஜய் நடிப்பில் இப்போது கோட் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கான வேலைகள் படு விறுவிறுப்பாக நடக்கிறது.
படத்தின் இசை குறித்து கேட்டால் யுவன் ஷங்கர் ராஜா இந்த முறை செம மாஸா பண்ணிடலாம் என்று கூறுகிறாரே தவிர எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை.
படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்துவந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு இலங்கை செல்ல இருக்கிறார்கள் என்றனர். ஆனால் தற்போது இலங்கையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய போட்டோஸ்
படம் குறித்து நீண்ட நாட்களாக எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில் ரஷ்யாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், தளபதி 68 என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் படக்குழு ரஷ்யாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டனர் என ரசிகர்கள் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
