ரஜினி தவறவிட்ட கதையில் நடிக்கவிருக்கும் தளபதி விஜய்.. யார் இயக்குனர் தெரியுமா

By Kathick Apr 24, 2022 10:20 AM GMT
Report

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவறிய திரைப்படம் பீஸ்ட்.

தளபதி 66

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். முதலாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

ரஜினி தவறவிட்ட கதையில் நடிக்கவிருக்கும் தளபதி விஜய்.. யார் இயக்குனர் தெரியுமா | Vijay Going To Act In Rajini Missed Story

தனது தளபதி 66 படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67ல், விஜய் நடிக்கப்போவதாக ஏற்கனவே ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் தயாரிக்க போவதாக தெரிவிக்கின்றனர்.

ரஜினிக்கு தவறவிட்ட கதையில் விஜய்

இந்நிலையில், விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் இப்படத்தின் கதையை தான், முதன் முதலில் ரஜினிக்கு கூறியுள்ளாராம் லோகேஷ். அந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தீடீரென சில காரணங்களால் இந்த கூட்டணி அமையவில்லை.

ரஜினி தவறவிட்ட கதையில் நடிக்கவிருக்கும் தளபதி விஜய்.. யார் இயக்குனர் தெரியுமா | Vijay Going To Act In Rajini Missed Story

இதனால், தற்போது ரஜினிக்கு கூறிய அந்த கதையை விஜய்க்கு ஏற்றது போல் சற்று சரி செய்து, இயக்கப்போவதாக தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US