GOAT படத்தை பார்த்துவிட்டு பயந்துபோன விஜய்! இயக்குனரிடம் சொன்ன விஷயம்
GOAT
தளபதி விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த ஜூன் 22ஆம் தேதி தான் GOAT படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதில் தந்தை மகன் என இரு வேடத்திலும் வந்து அசத்தியிருந்தார் நடிகர் விஜய். ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவிற்கு சிறந்த வரவேற்பும் கிடைத்தது.
பயந்துபோன விஜய்
கடந்த சில தினங்களுக்கு முன் GOAT படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவை புகழ்ந்து தள்ளியதாக தகவல் வெளிவந்தது. இது GOAT படத்தின் மீது பலருக்கும் நம்பிக்கையையும் வரவழைத்துள்ளது.

இந்த நிலையில், GOAT படத்தை பார்த்துவிட்டு இயக்குனரை புகழ்ந்த நடிகர் விஜய், சற்று பயந்துபோயுள்ளாராம். இதனால் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் புகழ்ச்சியை மட்டும் தெரிவிக்காமல், இப்படத்தை அனைவரும் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள், கவனமாக பார்த்து பண்ணுங்க என கூறினாராம் விஜய்.
இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan