கடந்த 20 வருடத்தில் தளபதி விஜய் கேட்ட சிறந்த கதை இதுதானாம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கவுள்ள பெயரிடப்படாத 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார்.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல் துவங்கிறதாம்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் செம தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, தளபதி 66 படத்தின் கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். இப்படத்தின் கதையை வம்சி விஜய்யிடம் கூறிய பின், இதுதான் நான் கடந்த 20 வருடத்தில் கேட்ட சிறந்த கதை என்று விஜய் கூறினாராம்.
அந்த அளவிற்கு படத்தின் கதையை இயக்குனர் வம்சி நன்றாக செதுக்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri