விஜயகாந்த் மகனுக்கு கைகொடுக்கும் விஜய்.. இன்ப அதிர்ச்சியில் விஜயகாந்த் குடும்பம்
விஜய் - விஜயகாந்த்
நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இதற்கான அனுமதியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் பெற்ற பின் தான் காட்சிகளை அமைத்துள்ளனர்.
படத்தில் இரண்டரை நிமிடம் விஜயகாந்த் AI தொழில்நுட்பம் மூலம் நடித்துள்ளார் என்றும் அந்த காட்சியை பார்த்துவிட்டு பிரேமலதா மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்றும் தகவல் வெளிவந்தது. இந்த சூழலில் நடிகர் விஜய்யிடம் விஜயகாந்தின் மகனும் இளம் நடிகருமான ஷண்முக பாண்டியன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
கைகொடுக்கும் விஜய்
தனது படைத்தலைவன் திரைப்படத்தின் டீசரை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யுமாறு விஜய்யிடம் கேட்டாராம் ஷண்முக பாண்டியன். இதற்கு விஜய் 'இதெல்லாம் ஒரு விஷயமா, படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது நடக்கிறது என்று சொல்லுங்கள் நானே வருகிறேன்' என கூறிவிட்டாராம்.
விஜயகாந்த் செய்த உதவியினால் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகால கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்ற விஜய், விஜயகாந்தின் மகனுக்கு திரையுலகில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருக்கிறாரே என்ற அவப்பெயர் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதனை படைத் தலைவன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்பதன் மூலம் நீக்க விஜய் முடிவு செய்துள்ளார் என இதன்மூலம் தெரிகிறது.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.