விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது
நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு விஜய் இன்று சென்னைக்கு திரும்புவதற்காக மதுரை ஏர்போர்ட் வந்தார். அப்போது அவரை பார்க்க பெரிய அளவில் ரசிகர்களும் திரண்டு இருந்தனர்.
சட்டை கிழிந்தது
விஜய்யை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர். விஜய் ஏர்போர்ட் உள்ளே வந்தபோது அவருடன் வந்த பவுன்சர் பத்திரிகையாளர்களையும் ரசிகர்களையும் தள்ளிவிட்டு சென்று இருக்கிறார்.
அந்த தள்ளுமுள்ளு மோதலாக மாறி ஒரு பவுன்சருக்கு அடி விழுந்து சட்டை கிழிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் சைலண்டாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய்#tvkvijay | #jananayagan | #thanthitv | #madurai pic.twitter.com/3FNkVHBz9o
— TVK VIJAY THIYAGU (@vijay_tambaram) May 5, 2025