ரஜினியின் கதையில் விஜய்.. சூப்பர்ஹிட் இயக்குனர் இப்படியொரு பிளான் போட்டாரா

Kathick
in திரைப்படம்Report this article
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும், தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்பது போல் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்து திடீரென கைவிடப்பட்ட திரைப்படம் ராணா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை போட்டு பிரம்மாண்டமாக துவங்கியது. தீபிகா படுகோன் கதாநாயகியாக இப்படத்தில் கமிட்டாகி இருந்தார்.
ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ராணா போல ஒரு சிறப்பான கதையை மீண்டும் படமாக வேண்டும் என்பது தான் எனது ஆசை என இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் கூறியுள்ளாராம்.
ராணா படத்தின் கதை எப்போது வேண்டுமானாலும் கூட படமாக எடுக்கலாம். காலம் தாண்டி பேசும் ஒரு படமாக ராணா இருக்கும். அந்தளவிற்கு இப்படத்தின் கதை சிறப்பாக இருக்கும் என கூறினாராம்.
ரஜினியின் கதையில் விஜய்
இந்த நிலையில், ராணா படத்தை தளபதி விஜய்யை வைத்து எடுக்க கே.எஸ். ரவிக்குமார் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ரஜினிக்கு எழுதிய கதையில் விஜய் நடித்தால் அது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை கவரும்.
ஆனால், விஜய்யை வைத்து எடுக்க ரவிக்குமார் முயற்சி செய்ததாக கூறப்படும் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.