தெலுங்கு சூப்பர்ஸ்டார் பட விழாவில் தளபதி விஜய்? லேட்டஸ்ட் தகவல்
பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறும், அதில் விஜய்யை பார்க்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. சன் டிவியில் ஒரே ஒரு பேட்டி மட்டுமே கொடுத்தார் விஜய். அதிலேயே அவர் குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறி இருந்தார்.
இருப்பினும் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடந்தது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது விஜய் தளபதி66வது படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் நிலையில் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்டா படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொள்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்து இருக்கும் இந்த பட விழாவில் விஜய் பங்கேற்றால் அவருக்கு தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியில் மேலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய் ப்ரீ ரிலீஸ் விழாவில் பங்கேற்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.
#BlockBusterSarkaruVaaripaata ???? pic.twitter.com/pgUtNeisrL
— thaman S (@MusicThaman) May 5, 2022