துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் இல்லை.. இந்த முன்னணி நடிகர் தானாம்
துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இப்படம் தான் விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ.100 கோடி வசூல் செய்த சாதனை படைத்த திரைப்படம்.

முதலில் நடிக்கவிருந்தது இவரா
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருத்தது நடிகர் சூர்யா தானாம். 7ஆம் அறிவு படத்திற்கு முன் துப்பாக்கி படத்தின் கதையை தான் சூர்யாவிற்கு கூறினாராம் முருகதாஸ்.
ஆனால், முதலில் 7ஆம் அறிவு படத்தை முடித்துவிட்டு, அதன்பின் துப்பாக்கி படத்தை பண்ணலாம் என்று சூர்யா கூறிவிட்டாராம். இதற்கிடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்க்கு ஒரு கதை கூற்றுப்படி ஏ.ஆர். முருகதாஸிடம் கேட்டுள்ளார்.

அப்போது, விஜய்க்கு முருகதாஸ் கூறிய கதை தான் துப்பாக்கி.
இதனால், தான் துப்பாக்கி படத்தில் சூர்யாவால் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் கூறப்படுகிறது.
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu