தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா?
ஜனநாயகன்
படம் வந்தால் போதும், கடைசியாக எங்கள் நாயகனை திரையில் பார்த்தாலே போதும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தான்.
ஜுலை 23, தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சமாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம தாறுமாறு வரவேற்பை பெற்றது.
முதல் நாளில் அனிருத், மமிதா பைஜு, ஜனநாயகன் பட தயாரிப்பாளர், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் தாஸ், ஜீவா, த்ரிஷா என பல பிரபலங்கள் முதல் நாளே ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 6 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது ஜனநாயகன் திரைப்படம்.
தமிழகத்தில் முதல் நாள் செய்த கலெக்ஷன் குறித்த தகவல் வந்துள்ளது. முதல் நாளில் இப்படம் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரையிலான வசூல் வேட்டை செய்துள்ளது ஜனநாயகன்.