விம்பிள்டனில் தளபதி விஜய்.. ஜனநாயகனாக மாறிய கோப்பையை வென்ற ஜன்னிக் சின்னர்
ஜன்னிக் சின்னர்
நடப்பு (2025) டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜன்னிக் சின்னர்.
இதன்மூலம் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸில் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விம்பிள்டன் டென்னிஸ்
இந்த நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் First லுக் போஸ்டரை எடிட் செய்து, விஜய்க்கு பதிலாக விம்பிள்டன் டென்னிஸ் புதிய சாம்பியன் ஜன்னிக் சின்னர் செல்பி எடுப்பது போல் பொறுத்தியுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் ' ஜன்னிக் சின்னர் விம்பிள்டன் நாயகன்' என தலைப்பு வைத்துள்ளனர்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் First லுக் போஸ்டரை உலக புகழ்பெற்ற விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.