விஜய் ரசிகர்களுக்கு வந்த ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்... தெறிக்கவிடலாமா...
ஜனநாயகன்
அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகவுள்ள திரைப்படம் ஜனநாயகன்.
எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன், மமிதா பைஜு என பலர் நடித்துள்ளனர்.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் பார்க்கும் போது இது முழுக்க முழுக்க அரசியல் படம் என தெரியவருகிறது.
அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

மாஸ் அப்டேட்
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை சனிக்கிழமை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாம். இது படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.