நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?
ஜனநாயகன்
போட்றா வெடிய, அடிதா மேளத்த என ஜுலை 23ம் தேதி முதல் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர் விஜய்யின் ரசிகர்கள்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படம் பல சிக்கல்களை கடந்து ரிலீஸாகிவிட்டது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் மொத்தமாக ரூ. 90 கோடி வரை வசூல் வேட்டை செய்தது.

ஓடிடி ரிலீஸ்
இப்படத்தை முதலில் அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனத்துக்கு ரூ. 110 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்.
ஆனால் படம் வெளியாவதில் இருந்த சின்னல் காரணமாக ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது. பின் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற ஜீ 5 ஓடிடி நிறுவனமே டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை ரூ.50 கோடிக்கு ஜீ5 ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளதாம். வரும் ஆகஸ்ட் 21ம் தேதி இந்தப் படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.