விஜய்யின் ஜன நாயகன் படத்தின் OTT ரைட்ஸ் கைப்பற்றியது எந்த நிறுவனம்?- வெளிவந்த விவரம்

Yathrika
in திரைப்படம்Report this article
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசி படம் என வெளியாகிறது ஜனநாயகன்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், பாலிவுட் நடிகர் பாபி தியோல் என பலர் நடிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு படு சூடாக நடந்து வருகிறது.
விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு இப்படம் தயாராவதால் இது கண்டிப்பாக முழுக்க முழுக்க அரசியல் கதைக்களமாக இருக்கம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த படத்தை KVN நிறுவனம் தயாரிக்கிறது, இந்தியளவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாகும்.
ஓடிடி ரிலீஸ்
விஜய்யின் படம் என்றாலே வியாபாரத்தில் நிறைய போட்டி இருக்கும், அதிலும் அவரது கடைசி படம் குறித்து சொல்லவே வேண்டாம்.
ஜன நாயகன் படத்தின் ஓடிடி வியாபாரம் சூடு பிடிக்க நடக்கிறதாம், நெட்பிளிக்ஸ் இந்த படத்தை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.