முன்பதிவில் வசூலை வாரிக்குவிக்கும் ஜனநாயகன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ஜனநாயகன்
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வழக்கமாக விஜய் படம் என்றாலே ஆவலுடன் ரசிகர்கள் காத்திருப்பார்கள், அதுவும் இது அவருடைய கடைசி படம் வேற, சொல்லவா வேண்டும்.

ஏற்கனவே இப்படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது ப்ரீ புக்கிங், அதாவது முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது.
முன்பதிவு வசூல்
ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரையிலான முன்பதிவில் மட்டுமே ரூ. 18.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது முன்பதிவில் இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மாலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri