தளபதி விஜய்யின் ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
ஜனநாயகன்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஜனநாயகன்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
முன்பதிவு வசூல்
விஜய்யின் படம் என்றாலே முன்பதிவு என்பது அமோகமாக நடைபெறும். அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படிதான் ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ரிலீஸுக்கு இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில், இதுவரை வெளிநாட்டில் நடந்த முன்பதிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனநாயகன் படம் இதுவரை நடந்த முன்பதிவில் ரூ. 4.2 கோடி வசூல் செய்துள்ளது.