ப்ரீ புக்கிங்கில் மட்டுமே விஜய்யின் ஜனநாயகன் இத்தனை கோடி வசூலித்ததா?... வருந்தும் ரசிகர்கள்
ஜனநாயகன்
தமிழ் சினிமா கடந்த சில வாரங்களாகவே கொண்டாட்டத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியே சோக மயமாகிவிட்டது, காரணம் என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்.
விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் நாளை (ஜனவரி 9) மாஸாக வெளியாக இருந்தது, ரசிகர்களும் முந்தியடித்துக்கொண்டு படத்தை முதல்நாளே பார்க்க புக்கிங் செய்து வந்தனர்.

ஆனால் ரிலீஸ் தேதி அறிவித்து வியாபாரம் எல்லாம் சூடு பறக்க நடக்க திடீரென ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் போனது.
நேற்றைய நீதிமன்ற வாதத்தில் ஜனநாயகன் படத்திற்கு சாதகமாக தீர்ப்பும் வரவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தார்கள்.
ப்ரீ புக்கிங்
விஜய்யின் படம் என்றாலே புக்கிங் மாஸாக நடக்கும், அதிலும் இது தளபதியின் கடைசிப்படம் என்றால் சும்மாவா, ரசிகர்கள் One Last Time விஜய்யை திரையில் காண மிகவும் ஆவலாக இருந்தனர். பட ரிலீஸ் தள்ளிப்போனது தளபதி ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.
ஆனால் நாளை படம் ரிலீஸ் இல்லை, ப்ரீ புக்கிங் செய்தவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் எனவும் கூறப்படுகிறது.
இப்போது நமக்கு வந்துள்ள தகவல் என்னவென்றால் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 65 கோடி கலெக்ஷன் ஆனதாக கூறப்படுகிறது.