விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் Satellite உரிமத்தை வாங்கியது யார் தெரியுமா?
ஜனநாயகன்
ஜனநாயகன், இந்த பட பெயர் சொன்னாலே சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என தெரியவில்லை.
விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ஜனநாயகன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது, ரசிகர்களும் படத்தை காண ஆவலாக உள்ளனர். அதேசமயம், இந்த படத்தோடு இனி விஜய் நடிக்கப்போவதில்லை என கேட்கும் போது மிகவும் வருத்தமாகவே தான் உள்ளது.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் நடக்காத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டத்தின் உச்சமாக நடக்க உள்ளது.
வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீடு நடக்க உள்ளது, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட் புக் செய்து வருகிறார்கள். மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடக்கும் இந்த விழாவை சுமார் 85,000 பேர் அமர்ந்து பார்க்க முடியுமாம்.

சாட்டிலைட்
சாதாரணமாகவே விஜய்யின் படங்கள் நல்ல வியாபாரம் ஆகும், அதிலும் ஜனநாயகன் கடைசிப்படம் என்பதால் பெரிய அளவில் வியாபாரம் நடந்து வருகிறது.
இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் மட்டும் ரூ. 325 கோடியை கடந்துள்ளதாம். சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படம் ரிலீஸ் முன்பே 81 % வருமானத்தை திரும்பப் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது என்ன தகவல் என்றால், விஜய்யின் ஜனநாயகன் படத்தில் சாட்டிலைட் உரிமையை பல கோடி கொடுத்து ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற ஜீ தமிழ் ரூ. 50 முதல் ரூ. 60 கோடி வரை வியாபாரம் பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri