ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டிய நடிகர் விஜய்யின் ஜனநாயகன்... எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
ஜனநாயகன்
ஒருவழியாக ரசிகர்கள் இத்தனை மாதம் காத்துக் கொண்டிருந்த நாள் வந்துவிட்டது.
நடிகர் விஜய்யாக வர வேண்டிய படம் இப்போது மாஸாக கெத்தாக தமிழக முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் ஜனநாயகன் படம் ஜுலை 23 வெளியாகிவிட்டது.
விஜய் படம் என்றால் சும்மாவா, அதுவும் அவரது கடைசிப்படம், திரையரங்குகள் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திரையரங்குகளில் விஜய் காட்சிகள் வரும்போதெல்லாம் விசில் சத்தம் காதை கிழிக்கும் அளவிற்கு உள்ளது. ஜனநாயகன் படத்தில் ரசிகர்களுக்காக விஜய் நிறைய விஷயங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே செய்துள்ள வசூல் சாதனை பற்றிய தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் ஜனநாயகன் பட முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 55 கோடி வரை படம் வசூல் வேட்டை செய்துள்ளது.