மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் ரசிகர்கள் கொண்டாடிய விஜய்-ஜோதிகாவின் குஷி திரைப்படம்... எப்போது?
குஷி படம்
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் குஷி.
பெயருக்கு ஏற்றார் போல் இந்த படத்தை நினைத்தாலே ரசிகர்களுக்கு குஷி வரும், அந்த அளவிற்கு படம் அப்போதே அதிகம் கொண்டாடப்பட்டது. விஜய்-ஜோதிகா ஜோடியாக நடித்தார்கள், படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக அமைந்திருந்தது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்படம் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
ரீ-ரிலீஸ்
தற்போது படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகப்போகிறது. ரசிகர்களால் கொண்டாடப்படும் குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வந்துள்ளது.