கரூர் சம்பவம்.. இரவுக்குள் கைது? விஜய்க்கு வந்த சிக்கல்
கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மற்றும் கரூருக்கு சென்று இருந்தார். கரூரில் அவரை பார்க்க காத்திருந்த கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் 41 பேர் பலியானார்கள்.
ஏராளமானோர் இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் முன்பே பேருந்தை நிறுத்திவிட்டு விஜய்யை பேசும்படி போலிஸ் அதிகாரிகள் கூறினார்களாம், ஆனால் கட்சி தரப்பு கேட்கவில்லை என போலீஸ் தற்போது குற்றம்சாட்டி இருக்கிறது.
மேலும் தற்போது போலீசார் பதிவு செய்திருக்கும் FIR-ல் விஜய் வேண்டுமென்றே தாமதமாக கரூருக்கு வந்தார் எனவும் போலீசார் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
புஸ்ஸி ஆனந்த் இரவுக்குள் கைது?
இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று இரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்களாம்.
விஜய்க்கு மிக நெருக்கமான நபராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டால் விஜய்க்கு மேலும் சிக்கல் வரும் என பரபரப்பு எழுந்திருக்கிறது.