அப்பா சந்திரசேகருக்கு முத்தம் கொடுத்த மகன் விஜய்.. உடன் இருக்கும் முக்கிய சொந்தம்
நடிகர் விஜய் - எஸ்.எ. சந்திரசேகர்
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே கடந்த வருடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அரசியல் காரணமாக ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன்பின், தனது தந்தை குறித்து பேசாமல் இருந்த விஜய் பீஸ்ட் படத்திற்காக கொடுத்த பேட்டியில், தந்தை குறித்தும் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்தும் பேசியிருந்தார்.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது என்று எப்போது கூறுவார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மறக்க முடியாத நாள்
இந்நிலையில், நடிகர் விஜய் தனது அப்பா சந்திரசேகருக்கு சிறு வயதில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் விஜய்யுடன் அவரது தங்கை வித்யாவும் இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை சந்திரசேகர் தனது மகளின் நினைவு நாளான இன்று தனது சமூக வலைத்தளத்தில் 'மறக்க முடியாத நாள்' என்று கூறி பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..