குஷி ரீ ரிலீஸ்.. காத்து வாங்கும் பாக்ஸ் ஆபிஸ்! விஜய் படத்திற்கு இந்த நிலைமையா
குஷி
வழக்கமாக விஜய்யின் படங்கள் ரீ ரிலீஸானால் கண்டிப்பாக வசூல் பட்டையை கிளப்பும். இதற்கு முன் வெளிவந்த கில்லி மற்றும் சச்சின் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் ரீ ரிலீஸான குஷி படம், பாக்ஸ் ஆபிஸில் காத்து வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, விவேக், மும்தாஜ், விஜயகுமார் ஆகியோர் நடித்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த படம் குஷி. இப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை விஜய்க்கு தேடி தந்தது என்பதை பற்றி நாம் அறிவோம்.
இப்படம் வெற்றியடையவில்லை என்றால், சினிமாவை விட்டு போய்விடலாம் என்கிற எண்ணத்தில் தான் இருந்ததாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்படி ஒரு திட்டத்தில் இருந்த விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக குஷி அமைந்தது.
வசூல்
25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகியுள்ள குஷி திரைப்படத்தை முதல் நாள் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த வீடியோக்கள் எல்லாம் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் குவியவில்லை.
ஆம், ரீ ரிலீஸாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 1.55 கோடி வசூல் செய்துள்ளது. இது விஜய்யின் ரீ ரிலீஸ் படத்திற்கு மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.