பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மவுசு குறைந்துவிட்டதா? குஷி ரீ ரிலீஸ் வசூல் விவரம்
குஷி ரீ ரிலீஸ்
விஜய்யின் நடிப்பில் உருவான கில்லி மற்றும் சச்சின் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் அளவில் வசூல் செய்தன. ரீ ரிலீஸில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு திரைப்படங்களின் ரீ ரிலீஸை தொடர்ந்து விஜய்யின் பிளாக்பஸ்டர் ரொமான்டிக் படமான குஷி கடந்த வாரம் ரீ ரிலீஸ் ஆனது. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா நடித்திருப்பார்.

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
மேலும், விவேக், விஜயகுமார், மும்தாஜ் என பலரும் நடித்திருந்தனர். தேனிசை தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டானது என்பதை நாம் அறிவோம். மேலும் பின்னணி இசையும் நம் மனதை தொட்டது.
வசூல்
2000ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் ரூ. 1.7+ கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என கூறுகின்றனர். ரீ ரிலீஸ் படங்களின் வசூலில் விஜய்யின் மவுசு குறைந்துவிட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.