காக்கா, கழுகு.. லியோ சக்ஸஸ் மீட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! அதிர்ந்த அரங்கம்
ரஜினி ஜெயிலர் பட விழாவில் 'காக்கா, கழுகு' என கூறிய கதை சர்ச்சையாகி, விஜய்யை தான் காக்கா என அவர் சொல்கிறார் என சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தற்போது லியோ படம் ஜெயிலரை விட அதிகம் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. அதை கொண்டாட பிரம்மாண்ட வெற்றி விழா இன்று நடைபெற்றது.
வழக்கமாக விஜய் மேடையில் பேசினால் ஒரு குட்டி கதை ரசிகர்களுக்கு சொல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இன்று லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசும்போதும் அவர் ஒரு குட்டி கதையை கூறி இருக்கிறார்.
காக்கா, கழுகு..
'நான் ஒரு குட்டி கதை சொல்றேன். இரண்டு பேர் காட்டுக்கு வேட்டைக்கு போனார்களாம். காட்டில் யானை, புலி, மான், முயல், காக்கா, கழுகு (இதை சொன்னதும் ரசிகர்கள் சத்தத்தால் அரங்கம் அதிர்கிற'
"ஒருவன் வில் அம்புடன் வேட்டைக்கு சென்றான், இன்னொருவன் கையில் வேல் போல இருக்கும் ஈட்டி எடுத்து சென்றான்."
"முதல் நபர் வில் அம்புடன் முயலை குறி வைத்து வேட்டையாடினார். இரண்டாம் நபர் ஈட்டி உடன் யானைக்கு குறி வைத்தார். ஆனால் அவரால் வேட்டையாட முடியவில்லை. இருவரும் வீட்டுக்கு போகும்போது ஒருவர் கையில் முயல் இருந்தது, இன்னொருவர் வெறும்கையுடன் சென்றார்."
"இந்த இரண்டு பேரில் யானைக்கு குறி வைத்து தோற்றவர் தான் வெற்றியாளர். அதனால் எப்போவும் பெரிய விஷயத்தை சாதிக்க கனவு காணுங்க" என விஜய் கூறி இருக்கிறார்.