குட்டி ஸ்டோரி
விஜய் எப்போதும் அவரது படங்களில் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் பேசும்போது தவறாமல் ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லி வருகிறார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படி என்ன கதை சொல்லப்போகிறார் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.A
அவர் சொன்ன கதை இதுதான்..
ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என நான்கு பேர் இருந்தனர். அப்பா தினமும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது இரண்டு சாக்லேட் வாங்கி வருவார்.
தங்கை அந்த சாக்லேட்டை சாப்பிட்டுவிடுவார். ஆனால் அண்ணன் அது நாளைக்கு பள்ளிக்கு எடுத்து செல்லலாம் என நினைத்து ஒரு இடத்தில் அதை ஒளித்து வைப்பார். அதையும் தங்கை சற்று நேரத்தில் எடுத்து சாப்பிட்டுவிடுவாள்.

இதுதான் அன்பு
அன்பு என்றால் என்ன என ஒரு நாள் தங்கை அண்ணனிடம் கேட்க, 'உன்னோட சாக்லேட்டை நீ சாப்பிடுற, நான் மறைத்து வைக்கும் சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டுடுற. நீ எடுப்பனு தெரிஞ்சும் அதே இடத்தில டெய்லி உன் அண்ணன் சாக்லேட் வைக்குறேன்ல.. அது தான் அன்பு என சொன்னாராம்.
அன்பு மட்டுமே இந்த உலகத்தையே ஜெயிக்க கூடிய மிகப்பெரிய ஆயுதம். நமக்காக எதையும் விட்டுக்கொடுக்கக்கூடிய நமது உறவுகள், எதுக்காகவும் நம்மை விட்டுக்கொடுக்காத நண்பர்கள்.. இந்த இரண்டு அன்பு இருந்துவிட்டாலே எல்லாம் முடிந்தது என குட்டி ஸ்டோரியை முடித்து இருக்கிறார் விஜய்.

ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ