சன் டிவி பேட்டியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
பீஸ்ட் படத்திற்காக இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்று தான் விஜய் ரசிகர்கள் எல்லோரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அதற்கு காரணம் விஜய் அந்த மேடையில் ஒரு குட்டி ஸ்டோரி நிச்சயம் கூறி இருப்பார், அதை மிஸ் செய்கிறோம் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் சன் டிவியில் விஜய் 10 வருடங்களுக்கு பிறகு கொடுத்திருக்கும் பேட்டி வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருக்கிறார். கால்பந்து மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றை பற்றியது தான் அந்த கதை.
"புல்லாங்குழலை பார்த்து கால்பந்து கேட்டதாம்.. எனக்குள்ளும் காற்று தான் இருக்கிறது, உனக்குள்ளும் காற்று தான் இருக்கிறது, ஆனால் என்னை எட்டி உதைக்கிறார்கள், உன்னை உதட்டில் வைத்து முத்தம் கொடுக்கிறார்கள். அது ஏன்? என கேட்டதாம்."

"நீ உனக்கு உள்ளே வரும் காற்றை யாருக்கும் கொடுப்பதில்லை, ஆனால் நான் எனக்குள் வரும் காற்றை நல்ல இசையாக மாற்றி கொடுக்கிறேன். அதனால் தான் என flute சொன்னதாம். இது போல நாம் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும்."
"கால்பந்து போல இல்லாமல், புல்லாங்குழல் போல கொஞ்சம் மாற வேண்டும்" என விஜய் கூறினார்.